இந்த உலகமே எவன்டா இந்த லூசு கூன்னு தான் பார்த்துச்சு: தெறிக்கும் சூரரைப் போற்று டீஸர்

அறிவித்தபடி சரியாக 5 மணிக்கு டீஸரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளியிட்டுள்ளார். கையில் ஆறாயிரம் ரூபாயை வச்சுக்கிட்டு ஏரோபிளேன் கம்பெனி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னப்போ இந்த உலகமே எவன்டா இந்த லூசு கூன்னு தான் பார்த்துச்சு என்று சூர்யா சொல்வதுடன் டீஸர் துவங்குகிறது.

சூர்யா கதாபாத்திரத்தின் பெயர் நெடுமாறன் ராஜாங்கம். உனக்கெல்லாம் எதுக்குய்யா பெரிய மனுஷங்க பண்ற பிசினஸ் ஊருக்குப் போய் மாடு மேய்க்கிற வேலையை பாரு என்று சூர்யாவை பார்த்து கூறுகிறார்கள். டீஸரில் பிஜிஎம் தெறிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் தீயாக வேலை செய்திருக்கிறார்.