விறகு எடுக்கச் சென்ற இளம்பெண்.! பைக்கில் வந்த 3 பேர்... காட்டில் நடந்த அட்டூழியம்...

காட்டுக்கு விறகு எடுக்க சென்ற இளம்பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்ற வாலிபர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருமணமாகி சில மாதங்களிலேயே இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் அந்த கிராம பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக கைதாகியுள்ள நான்கு பேரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.


ஆந்திரா சித்திதூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமாரி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) 20 வயதான இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இவர் சமையலுக்காக அருகில் இருந்த காட்டு பகுதிக்கு விறகு எடுப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கு இரண்டு பைக்கில் மூன்று பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முடிவு செய்த அவர்கள், பெண்ணின் மூதாட்டி இறந்து விட்டதாகவும், நாங்களே உங்களை வீட்டுக்கு அழைத்து செல்வதாகவும் பொய் கூறி அப்பெண்ணை ரமேஷ் என்பவர் தனது பைக்கில் அமரச்செய்து புறப்பட்டுள்ளார்.