திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்பமாக்கிய வழக்கில் இரண்டு பேர் மீது ஜார்கண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜெய்சல்மர் சிட்டியில் தாய் தந்தையுடன் வசித்து வந்த இளம்பெண்ணை மிரட்டி பாலத்காரம் செய்து வந்ததாக வாலிபர்கள் இருவர் மீது மொஹங்கர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .
ஜார்கண்ட் மாநிலத்தை சேந்தவர் மோனி (23). இவருக்கு திருமணமாகி கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் மோனி தனது பெற்றோருடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசித்து வந்தார். இவரது பெற்றோர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் வேலைக்கு சென்ற பின்பு மோனி வீட்டில் தனியாக இருப்பார்.
இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ரஷீத் கான் மற்றும் அவருடைய நண்பரும் மோனியிடம் நட்பாக பேசி பழக ஆரம்பித்தனர். பின்னர் ரஷீத் கான் மோனியை பாலியல் வலையில் விழ வைத்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் ரஷீத் கான் மோனியை மிரட்டி, தன்னுடைய நன்பனுடனும் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார்.