ஸ்வஸ்திகா குறியீடு ஒரு மங்கலகரமான குறியீடு என்பது நமக்குத் தெரியும்.இந்த குறி இந்து மதத்தில் மட்டுமல்ல, சமணம் மற்றும் புத்த மதங்களிலும் உண்டு.
ஐரோப்பிய நாடுகளிலும் இந்த குறியீடு பயன்படுத்தப்படுகிறது. அந்த குறியீட்டுக்கும் ஹிட்லருக்கும் நெருங்கிய ஒரு உறவு இருக்கிறதாம். அதுபற்றியும் உலகம் முழுவதும் இதை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றியும் இந்த பகுதியில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்வஸ்திகா
(卐 அல்லது 卍) என்பது ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதிலும் உள்ள மதங்களின் ஒரு பழைய அடையாளமாகும்.
இது நல்ல அதிர்ஷ்டம், வாழ்க்கை அல்லது செழிப்பு போன்ற நேர்மறையான அர்த்தங்களைக் தன்னுள் கொண்டு விளங்குகிறது. .இரண்டாம் உலகப் போரின்போது நாசிசம், ஆரிய மேலாதிக்கம் மற்றும் யூத எதிர்ப்பு போன்றவற்றால் இது இழிவுபடுத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய இந்திய நூல்களில் இது காணப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் தொல்பொருட்கள், கலைப்பொருட்கள் எல்லாம் ஸ்வஸ்திகா இருப்பை பறைசாற்றுகின்றன. ஆனால் பல நாடுகள் இதை தடை செய்தும் உள்ளன.
இருப்பினும் இன்றளவும் உலகின் பெரும்பாலான மக்களால் மதங்களால் இந்த சின்னம் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நேர்மறை அர்த்தமே இதற்கு காரணமாகும்.