யார் இந்த தத்தாத்ரேயர்? - மூன்று கடவுள்களின் சங்கமமாக சாந்தமாக காணப்படும் திரிமூர்த்தி

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் தலைகளுடன் மும்மூர்த்திகளின் உருவமாக காட்சி அளிக்கும் தத்தாத்ரேயர் யாரின் அவதாரம், எப்படி இருப்பருப்பார் தெரியுமா


பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை உள்ளடக்கியவராக இருக்கும் கடவுளாக பார்க்கப்படுபவர் தான் தத்தாத்ரேயர். இவரை திருமூர்த்தி எனவும் அழைக்கப்படுவது வழக்கம்.


இவரை சிலர் திருமாலின் அம்சமாகப் பார்க்கின்றனர். அதே சமயம் இவர் அத்ரி முனிவருக்கு மகனாக பிறப்பேன் என வாக்களித்த சிவ பெருமான், அவருக்கு தத்தாத்ரேயராகத் தோன்றினார் எனவும் கூறப்படுகிறது. இவரைக் குறித்து இராமாயணம், மகாபாரதத்தில் பல குறிப்புகள் உள்ளன.
இதில் முக்கிய குறிப்பாக கார்த்தவீரிய அர்ஜுனன் இவரிடம் வரம் பெற்றதாகா குறிப்புகள் உள்ளன.

இந்தியா மற்றும் நேபாளத்தின் பல பகுதிகளில் இவரை வணங்கி வருகின்றனர். இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, குஜராத் போன்ற வட மேற்கு இந்தியாவில் வழிபட்டு வருகின்றனர்.