சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திர சுவாமி கோயிலில் ரஜினிகாந்த் இன்று சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் கமலைத் தொடர்ந்து ரஜினியும் அரசியலில் களமிறங்குவதை உறுதிசெய்துள்ளார். பிப்ரவரி 21ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நடிகர் ரஜினியும் ஏப்ரல் மாதம் முழுவதும் சுற்று பயணம் செய்கிறார்.

இருவரும் தற்போது தங்கள் கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் மும்மரமாக உள்ளனர். இச்சூழலில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை காலை சாமி தரிசனம் செய்தார்.


ரஜினிகாந்த் வரும் செவ்வாய் முதல் 4 நாட்களுக்கு மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம் தொடர்பான கூட்டம் நடத்த உள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது